மார்ச்சு 27
Appearance
<< | மார்ச் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXXIV |
மார்ச்சு 27 (March 27) கிரிகோரியன் ஆண்டின் 86 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 87 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 279 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1513 - நாடுகாண் பயணி ஜுவான் பொன்ஸ் டி லெயோன் வட அமெரிகாவைக் (புளோரிடா) கண்ணுற்றார்.
- 1625 - முதலாம் சார்ல்ஸ் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லந்து மன்னராக முடி சூடினார். அத்துடன் பிரான்ஸ் மன்னனாகவும் தன்னை அறிவித்தார்.
- 1854 - கிரிமியாப் போர்: ஐக்கிய இராச்சியம் ரஷ்யா மீது போரை அறிவித்தது.
- 1890 - கென்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
- 1918 - மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் அச்சு அணிஆதரவு அரசாங்கம் யூகொஸ்லாவிய வான்படையினரால் கவிழ்க்கப்பட்டது.
- 1958 - நிக்கிட்டா குருஷேவ் சோவியத் பிரதமர் ஆனார்.
- 1964 - அமெரிக்க சரித்திரத்தில் அதி சக்தி வாய்ந்த 9.2 ரிக்டர் நிலநடுக்கம் அலாஸ்காவில் இடம்பெற்றதில் 125 பேர் கொல்லப்பட்டனர். அன்கரேஜ் என்ற நகரத்தின் பெரும் பகுதி சேதமுற்றது.
- 1968 - விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.
- 1969 - நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
- 1970 - கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது.
- 1977 - இரண்டு பயணிகள் விமானங்கள் கனாறி தீவுகளில் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.
- 1980 - நோர்வேயின் எண்ணெய்த் தாங்கி ஒன்று வட கடலில் விபத்துக்குள்ளாகியதில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- 1993 - ஜியாங் செமின் மக்கள் சீனக் குடியரசின் அதிபரானார்.
- 1994 - அலபாமாவில் சூறாவளி தாக்கியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
- 1845 - வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1923)
- 1847 - ஓட்டோ வல்லாச், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 1931)
- 1892 - சுவாமி விபுலாநந்தர், யாழ் நூல் எழுதியவர் (இ. 1947)
- 1901 - எய்சாக்கு சாட்டோ, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியப் பிரதமர் (இ. 1975)
- 1942 - ஜோன் சல்ஸ்டன், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய அறிவியலாளர்
- 1886 - லுட்விக் மீஸ் வான் டெர் ரோ, ஜெர்மானிய கட்டிடக் கலைஞர் (இ. 1969)
இறப்புக்கள்
- 1898 - சர் சையது அகமது கான், இந்திய அறிஞர் (பி. 1817)
- 1967 - யாரொஸ்லாவ் ஹெய்ரோவ்ஸ்கி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1890)
- 1968 - யூரி ககாரின், விண்வெளிவீரர் (பி. 1934)
சிறப்பு நாள்
உலக திரையரங்க தினம்