ஜூலை மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை..... ஐடிஆர் முதல் கிரிக்கெட் கார்டு வரை பல மாற்றங்கள்....

Authored by இரா.ரூபாவதி | The Economic Times Tamil | Updated: 26 Jun 2024, 3:46 pm

இன்னும் சில தினங்களில் ஜூலை மாதம் தொடங்க உள்ள நிலையில், சில மாற்றங்கள், சில அப்டேட்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது என்னென்ன என்பதை தெரிந்து வைத்துகொள்வது அவசியம்.

இன்னும் சில தினங்களில் ஜூலை மாதம் தொடங்க உள்ள நிலையில், சில மாற்றங்கள், சில அப்டேட்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அது என்னென்ன என்பதை தெரிந்து வைத்துகொள்வது அவசியம்.
credit card - et tamil
பேடிஎம் பேமெண்ட்ஸ்

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் ஜூலை 20ம் தேதியுடன் பேலன்ஸ் இல்லாத மற்றும் ஒராண்டுக்கு மேல் எந்தவிதமான பணப் பரிமாற்றங்களும் இல்லாத வாலெட்டுகளின் கணக்குகள் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்படும் வாலெட் கணக்குதாரர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கார்டு கிரெடிட் கார்டு விதிகள்

2024ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கு ரிவார்டு பாயிண்ட் வழங்குவது நிறுத்தப்படும் என எஸ்பிஐ கிரெடிட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளன.

ஏர் இந்தியா எஸ்பிஐ பிளாட்டினம் கார்டு, சென்னை மெட்ரோ எஸ்பிஐ கார்டு,கிளப் விஸ்தாரா எஸ்பிஐ கார்டு
கிளப் விஸ்தாரா எஸ்பிஐ கார்டு பிரைம்,டெல்லி மெட்ரோ எஸ்பிஐ கார்டு,Etihad கெஸ்ட் எஸ்பிஐ கார்ட், ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு, ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர், மும்பை மெட்ரோ எஸ்பிஐ கார்டு,நேச்சர் பேஸ்கெட் எஸ்பிஐ கார்டு, பேடிஎம் எஸ்பிஐ கார்டு, பேடிஎம் எஸ்பிஐ கார்டு செலக்ட், ரிலையன்ஸ் எஸ்பிஐ கார்டு,ரிலையன்ஸ் எஸ்பிஐ கார்டு பிரைம்,யாத்ரா எஸ்பிஐ கார்டு உள்ளிட்ட கார்டுகளுக்கு ரிவாட் பாயிண்டுகள் இல்லை என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு கட்டணங்கள்

ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளுக்கு ஜூலை 1ம் தேதி முதல் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. எமரால்டு பிரைவேட் மெட்டல் கிரெடிட் கார்டு தவிர அனைத்து கிரெடிட் கார்டுகள் மற்றும் சில சேவைகளுக்கான கட்டணங்களை ரூ. 100 முதல் ரூ. 200 வரை உயர்த்தியுள்ளது.

காசோலை , பண பிக்-அப் கட்டணம் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பிக்-அப் ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டண சீட்டு கோரிக்கை- ஒரு கட்டணச் சீட்டுக்கு ரூ. 100 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

டயல்-ஏ-டிராஃப்ட் - பரிவர்த்தனை கட்டணம். வரைவு மதிப்புத் தொகையில் 3% கழித்தல், குறைந்தபட்சச் செலவு ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளியூர் காசோலை செயலாக்க கட்டணம் - காசோலை மதிப்பில் குறைந்தபட்சம் 1% முதல் ரூ.100 வரை கட்டணம் விதிக்கப்படும்.

3 மாத கால அளவுக்கு மேல் உள்ள வங்கி ஸ்டேட்மெண்ட் பெறுவதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு

2023-24 நிதியாண்டுக்கான (AY 2024-25) ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஒருவேளை ஜூலை 31ம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய தவறினால் 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் வரை தாமதமான ரிட்டனைத் தாக்கல் செய்யலாம்.
Senior citizens- களுக்கு super ஆன 10 FD scheme!



Personal Finance மற்றும் வருமான வரி பற்றிய கூடுதல் தகவல், சமீபத்திய அப்டேட்களை எகனாமிஸ் டைம்ஸ் தமிழ் Business News இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்
இரா.ரூபாவதி கட்டுரையாளரை பற்றி
இரா.ரூபாவதி Senior Digital Content Producer
இரா.ரூபாவதி, எகனாமிக் டைம்ஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவில் SENIOR DIGITAL CONTENT PRODUCER பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். தமிழின் முன்னணி ஊடக நிறுவனமான விகடன் குழுமத்தின் நாணயம் விகடன் வார இதழில் பணியாற்றியபோது, பொருளாதாரம், பங்குச்சந்தை, பார்சனல் ஃபைனான்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அனுபவம் பெற்றார். அங்கு 4 ஆண்டுகள் பணி அனுபவத்துக்குப் பின்னர், தமிழின் முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனமான நியூஸ் 18 தமிழ் சேனலில் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார். சென்னை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டமும், லயோலா கல்லூரியில் ஊடகத்துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.Read More