உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:இந்து சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இந்து சமய வலைவாசல்
.

அறிமுகம்

ஓம்
ஓம்

இந்து சமயம் (Hinduism) என்பது இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாகும். இச்சமயம் சைவம், வைணவம்,சாக்தம்,கௌமாரம்,சௌரம்,காணாபத்தியம் முதலிய பிரிவுகளை உள்ளடக்கியதாகும். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. இந்தியாவில் பெரும்பாலான இந்துக்கள் வசித்தாலும் நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், ஃபிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.

இந்து சமயம் பற்றி மேலும் அறிய...

சிறப்புக் கட்டுரைகள்

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம், சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன், பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்வலிமையும், அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும், இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது.

இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது நிறைவடைகின்றது.


இந்து சமய கடவுள்கள்

அக்னி தேவன்
அக்னி தேவன் இந்துக்களால் வணக்கப்படும் தெய்வம். இவர் தேவர்களின் புரோகிதராக ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறார். அக்னி தேவனுக்கு மூன்று உருவங்கள் உண்டு: நெருப்பு, மின்னல், சூரியன். சூரியனின் ஆற்றலாக அக்னி தேவன் விளங்குகிறார்.

இவர் வேதங்களில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றார். நெருப்பின் அதிபதியான இவர் நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளார். வேள்விகளில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு அக்னி தேவனே எடுத்துச்செல்கிறார். அக்னி மற்ற தேவர்களைப் போல என்றும் இளமை உடையவராக கருதப்படுகிறார்.

இவர் தானாக பிறந்ததை குறிக்கும் வகையில், குச்சிகளை ஒன்றின் மீது ஒன்று வைத்து கடைந்து நெருப்பை உருவாக்கும் அக்னிமத்தனம் சில இந்து சடங்குகளில் மேற்கொள்ளப்படுகிறது.


சிறப்புப் படம்

ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை
ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை காட்டியவாறு தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை
படிம உதவி: Nmisra

சின்முத்திரையை காட்டியவாறு ஜகத்குரு ராமபத்ராச்சாரியார் மந்தாகினி ஆற்றங்கரையில் சின்முத்திரை தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலை. வலதுகையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை எனப்படுகிறது.


பகுப்புகள்

இந்து சமய பகுப்புகள்

உங்களுக்குத் தெரியுமா?

வர்த்திதம்
வர்த்திதம்
  • பரதநாட்டிய கலையில் உள்ள நூற்றியெட்டு கரணங்களை சிவபெருமான் ஆடியமை நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன.
  • 64 பாஷாணத்தில் நீலி என்ற பாஷாணம் மற்ற 63 பாஷணத்தின் விஷத்தினையும் முறிக்க வல்லதாகும்.
  • திருமாலின் பத்து அவதாரத்தில் புத்தரை வணங்கும் வழக்கமும் வட இந்தியாவில் உள்ளது.

இந்து சமயம் தொடர்பானவை

தொடர்பானவை

இந்து சமயம்

திரட்டு கடவுள்கள் • பிரிவுகள் • வரலாறு • தொன்மவியல்

தத்துவம்: அத்வைதம்  • ஆயுர்வேதம் • பக்தி • தர்மம் • விதி • மாயை • மீமாம்சை • வீடுபேறு • நியாயம் • பூசை • மறுபிறப்பு • சாங்க்யம் • பிறவிச்சுழற்சி • சைவம் •சாக்தம் • தந்திரம் • வைஷேசிகம் • வைணவம் • வேதாந்தம் • தாவர உணவு முறை • யோகா • யுகம்

இந்து நூல்கள்: உபநிடதம் • வேதம் • பிரமாணம் • பகவத் கீதை • இராமாயணம் • மஹாபாரதம் • புராணம் • ஆரண்யகம் • சிக்சாபத்ரி • வசனாம்ருதி • இராமசரிதமானஸ்

பட்டியல்: அதர்வண வேதம் • அய்யா வழி •அசுரர்கள் • அவதாரங்கள் • மதமாற்றம் • கடவுள்கள் • இந்து கேளிக்கையாளர்கள் • விழாக்கள் • சாதுக்கள் மற்றும் குர���க்கள் • கிருஷ்ணன் • போர்வீரர் • ராக்‌ஷசர்கள் • இந்து போர்வீரர்கள் • வேதகால ஆசிரியர்கள் • இந்து சமய கோயில்களின் பட்டியல் • யோகா பள்ளிகள்

தொடர்புடையவை: ஜோதிடம் • இந்து நாட்காட்டி • வர்ணம் (இந்து மதம்) • நாடுவாரியாக • திருவிழாக்கள் • அருஞ்சொற்பொருள் பட்டியல் • சட்டம் • சாதுக்கள் மற்றும் குருக்கள் • மந்திரம் • மூர்த்தி • இசை • கோயில்கள் • ஞானம்

தொகு  

விக்கித்திட்டங்கள்


தாய்த் திட்டம்
விக்கித்திட்டம் சமயம்
விக்கித்திட்டம்
முதன்மைத் திட்டம்
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இந்து சமயம்
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இந்து சமயம்/தொன்மவியல்
விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் இந்து சமயம்/தத்துவம்


தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • இந்து சமயம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|இந்து சமயம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • இந்து சமயம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இந்து சமயம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • இந்து சமயம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

இந்து சமயப் பிரிவுகளின் வலைவாசல்கள்


சைவம்சைவம்
சைவம்
வைணவம்வைணவம்
வைணவம்
கௌமாரம்கௌமாரம்
கௌமாரம்
[[சௌரம்]சௌரம்
[[சௌரம்]
காணாபத்தியம்காணாபத்தியம்
காணாபத்தியம்
அய்யா வழிஅய்யா வழி
அய்யா வழி
சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் சௌரம் காணாபத்தியம் அய்யா வழி
தொகு  

தொடர்புடைய வலைவாசல்கள்


பௌத்தம்பௌத்தம்
பௌத்தம்
ஜைனம்சமணம்
ஜைனம்
சீக்கியம்சீக்கியம்
சீக்கியம்
சமயம்சமயம்
சமயம்
இந்தியாஇந்தியா
இந்தியா
பௌத்தம் சமணம் சீக்கியம் சமயம் இந்தியா
தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இந்து_சமயம்&oldid=3755490" இலிருந்து மீள்விக்கப்பட்டது