உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தர்ப்பச்செலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்பொருளியலில் பிறவாய்ப்புச் செலவு அல்லது பிறவாய்ப்பு இழப்பு அல்லது சந்தர்ப்பச்செலவு அல்லது அமையச்செலவு (Opportunity cost) என்பது ஒரு குறிப்பிட்ட தெரிவை மேற்கொள்ளும் பொருட்��ு அதற்கடுத்த நிலையிலுள்ள தெரிவை இழப்பது ஆகும். அதாவது ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை விட்டுக்கொடுப்பது எனலாம். இது தவறவிட்ட வாய்ப்புகளால் ஏற்படும் இழப்பினைக் குறிக்கிறது.[1]

ஒரு சூழ்நிலையில் ஒருவருக்குப் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் வளப்பற்றாக்குறை காரணமாக அவற்றுள் ஒன்றையே அவரால் தெரிவு செய்ய இயலும். எனவே அவர் அவற்றில் சிறந்ததாகக் கருதுவதையோ அல்லது மிகச் சாதகமானதையோ தெரிவு செய்வார். இதனால் மேலும் பல தெரிவுகளை / வாய்ப்புகளைத் தவற விடுகிறார். இப்படித் தவறவிட்ட வாய்ப்புகளால் அவருக்கு கிட்டக்கூடிய பலன்களை இழக்கிறார். இந்த இழப்பே பிறவாய்ப்பு இழப்பு எனப்படுகிறது. பொருளியலில் இது ஒரு முக்கியமான கூற்றாகும். பற்றாக்குறைக்கும் தெரிவுக்கும் இடையே உள்ள அடிப்படை உறவினை விளக்குகிறது.[2] குறைவான வளங்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.[3]

இலவசப் பண்டங்கள் அல்லாத பொருளாதாரப் பண்டங்களுக்கே அமையச்செலவு காணப்படும். காரணம், இவ் வகையான பண்டங்கள் அருமையாகக் காணப்படுவதும்,மாற்றுப்பயன்பாடு உடையனவாக இருப்பதுவேயாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Opportunity Cost". Investopedia. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.
  2. James M. Buchanan (2008). "Opportunity cost". The New Palgrave Dictionary of Economics Online (Second). அணுகப்பட்டது 2010-09-18. 
  3. "Opportunity Cost". Economics A-Z. The Economist. பார்க்கப்பட்ட நாள் 2010-09-18.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தர்ப்பச்செலவு&oldid=3539028" இலிருந்து மீள்விக்கப்பட்டது