உள்ளடக்கத்துக்குச் செல்

மின்தன்னுந்து பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னைப் புறநகர் மின்தன்னுந்து

மின்தன்னுந்து பெட்டி (ஆங்கில மொழி: Electric multiple unit (EMU)) என்பது மின்சாரத்தை உந்து சக்தியாகக் கொண்டு தன்னைத்தானே முன் நகர்த்திச் செல்லும் தொடருந்துப் பெட்டி ஆகும். இவ்வகைத் தொடருந்துகளில், ஒன்று அல்லது இரண்டு பெட்டிகளுக்குள்ளாக இழுவை இயக்கிகள் (ஆங்கிலம்: traction motors) பொருத்தப்பட்டிருக்கும். ஆகையால் இதற்கு ஓர் தனி உந்துப்பொறி தேவையில்லை. பெரும்பாலான மின்தன்னுந்துத் தொடருந்துகள், மனிதர்கள் பயணிப்பதற்காகவே பயன்படுகின்றன. ஆனால���ம் சில சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

மின்தன்னுந்துத் தொடருந்துகள், அதன் வேகமான முடுக்கம் மற்றும் மாசில்லா செயற்பாட்டிற்கும், பயணிகள் மற்றும் புறநகர் சேவைகளுக்காகவும் உலகம் முழுக்கப் பிரபலமானவை.[1] 

இவற்றையும் பார்க்க 

[தொகு]

மேற்கோள்கள் 

[தொகு]
  1. N. K. De (2004). Electric Drives. PHI Learning Pvt. Ltd. 8.4 "Electric traction", p.84.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்தன்னுந்து_பெட்டி&oldid=2105350" இலிருந்து மீள்விக்கப்பட்டது