உள்ளடக்கத்துக்குச் செல்

இராணுவப் புலனாய்வு இயக்குநரகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராணுவப் புலனாய்வு படைகள்
செயற் காலம்1941 – தற்போது வரை
நாடு இந்தியா
கிளை இந்தியத் தரைப்படை
வகைஇராணுவ்ப் புலனாய்வு
அளவு3,700
தலைமையகம்சேனா பவன், புது தில்லி
குறிக்கோள்(கள்)எப்போதும் விழித்திரு
சண்டைகள்இரண்டாம் உலகப் போர்
இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948
இந்தியா-பாகிஸ்தான் போர், 1965
இந்திய சீனப் போர்
1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர்
கார்கில் போர்
தளபதிகள்
தலைமை இயக்குநர், இராணுவப் புலனாய்வுலெப்டினண்ட் ஜெனரல். தருண் குமார்[1]
படைத்துறைச் சின்னங்கள்
சின்னம்

இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் (Directorate of Military Intelligence (M.I.) இந்தியத் தரைப்படையின் கீழ் செயல் படும் புலனாய்வு அமைப்பாகும்.[2] இராணுவ உளவுத்துறையின் முதன்மை நோக்கம், இராணுவத்தின் தந்திரோபாய, செயல்பாட்டு மற்றும் மூலோபாய அளவிலான தேவைகளுக்கு சரியான நேரத்தில், பொருத்தமான, துல்லியமான மற்றும் ஒத்திசைக்கப்பட்ட உளவுத் தகவல்களை இந்தியத் தரைப்படைக்கு வழங்குவதாகும். மேலும் இந்திய ராணுவத்திற்குள் இருக்கும் எதிரிகளின் உளவுத்துறை அச்சுறுத்த��்களைக் கண்டறிதல் மற்றும் எதிர்-உளவுத்துறை நடவடிக்கைகளையும் இது நடத்துகிறது.[3] இந்த அமைப்பு 1941ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இரண்டாம் உலகப் போர், இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 1948, இந்தியா-பாகிஸ்தான் போர், 1965, இந்திய சீனப் போர், 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் மற்றும் கார்கில் போர்களில் பணியாற்றியுள்ளது.

அமைப்பு

[தொகு]

இராணுவப் புலனாய்வு இயக்குநரகத்தில் சுமார் 3,700 பேர் உள்ளனர். அவர்களுக்கு புனே நகரத்தில் உள்ள இராணுவ புலனாய்வு பயிற்சிப் பள்ளி மூலம் உளவுப் பயிற்சி தரப்படுகிறது.[4] இதன் புலனாய்வு அமைப்பின் புவியியல் செயல் பரப்பு, நாட்டின் எல்லைகளிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lt Gen Tarun Kumar Aich, DGMI visited Military Intelligence Training School & Depot". 2023-02-06. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
  2. 2.0 2.1 Unnithan, Sandeep (28 January 2012). "The Secret Secret Service". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/story/bangladesh-indian-army-military-intelligence-directorate-sheikh-hasina/1/170880.html. 
  3. Unnithan, Sandeep (6 February 2012). "How Indian Army's Military Intelligence Directorate works". India Today (Living Media India Limited). https://www.indiatoday.in/magazine/special-report/story/20120206-bangladesh-indian-army-military-intelligence-directorate-sheikh-hasina-757152-2012-01-28. 
  4. "Military intelligence training school completes 75 years". Times Of India. பார்க்கப்பட்ட நாள் 3 February 2016.